2019 ம் ஆண்டுக்கான சமுர்த்தி மாணியங்களை வழங்கும் திட்டம்
கந்தகெட்டிய பிரதேச செயலகத்தில் 02 சமுர்த்தி வங்கி சங்கங்கள் அமைந்துள்ளன, இங்கு 4877 குடும்பங்கள் சமுர்த்தி மாணியங்களை பெறுகின்றனர், இன்னும் 248 குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்றனர்.
இச்சமுர்த்தி திட்டத்தின் மூலமாக பிரசேத்தில் சிகரட் மற்றும் புகையிலை பாவனையை குறைத்தல், உள ரீதியான மற்றும் மன ரீதியான அழுத்தங்களை குறைத்தல், மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு, மற்றும் திரிய லியத சவிய திட்டத்தின் கீழ் சரியான வீட்டு வசதி இல்லாத குடும்பங்களுக்கு வீட்மைப்புத்திட்டம் என்பன செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
சமுர்த்தி லைவிஹூட் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றிற்கு 50000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்ணாடி பொருட்கள், தராசுகள், இனிப்புப்பண்டங்கள் போன்ற உற்பத்திகளுக்கு மாணியங்கள் வழங்கப்படுகின்றன. சமூக பொருளாதார சூழலின் அடிப்படையில் வணிக அபிவிருத்தி அற்றும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
52 சமுர்த்தி குடும்பங்குக்கான வீட்டு அபிவிருத்தி திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது, இதற்காக 260000/- ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றில் பச்சை இலை, காய்கறி விற்பனை, பால் மற்றும் பழங்களின் விற்பனையும் உள்ளடக்கப்படுகின்றன.
இவற்றிற்கு மேலதிகமாக வெற்றிகரமான விற்பனையாளர்களின் உதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சிகளுக்கான ஒரு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி வங்கிகளினூடாகவும் சமுர்த்தி தொடர்பாண நிறுவனங்களின் மூலமாகவும் சிறுகடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாய திட்டங்களுக்கான விதைகள் மற்றும் நாற்றுகளை கொள்வனவு செய்யவும் சமுர்த்தி வங்கியினால் கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.















